நான் ரசித்தவை

நான் ரசித்ததில் பிடித்தது

Thursday 30 April 2015

காஜல் அகமட்


கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். குர்திஸ்தானி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் குர்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவரது கவிதை இது!

எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
இணைவின் புதிய சகாப்தமோ
அது கலையும் புதிய உதயமோ தேவையில்லை

நானே அதிசயமான ஒரு பூவாயிருப்பதால்
எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
எனக்கு முத்தங்கள் தேவையில்லை

உண்மையான முஷ்டியுள்ளதால்
ஒரு பிடியை நான்; வைத்திருக்க வேண்டும்

திருமண சகாப்தமோ
விவாகரத்து உதயமோ தேவையில்லை
என்றைக்குமே விதவையாகத் தேவையில்லை

எனக்கு முத்தங்கள் தேவையில்லை
அன்போடு இணைந்திருப்பதால்
நான் ஒரு தியாகியாக மாறுவேன்

சவப் பெட்டி மீதோ
என் மீது - பிணத்தின் மீதோ
எனக்குக் கண்ணீர் தேவையில்லை

அனுதாபத்துக்காக செர்ரிச் செடியை
எனது புதைகுழி வரை இழுத்துவரத்தேவையில்லை
மலர்களோ முத்தங்கனோ தேவையில்லை
கண்ணீரோ துயரமோ தேவையில்லை

கொண்டு வந்தது எதுவுமில்லை
பற்றியிருந்ததும் எதுவுமில்லை
தேசியக் கொடியில்லாத தேசம் போல
ஒரு குரலற்ற தேசம் போல
நான் மரணித்து விடுகிறேன்

நான் நன்றியுடையவள்
எனக்கு எதுவும் தேவையில்லை
எதையும் ஏற்கப் போவதுமில்லை!

Saturday 25 April 2015

நீல் ஆம்ஸ்ட்ராங்க் vs எட்வின் சி ஆல்ட்ரின்


இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...
"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய தவறுகளை களைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிற்போம்

Monday 13 April 2015

நேர் சிந்தனை


ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"
ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் தப்பி இருப்பார்கள்.
.
.
.
.
.
.
.
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்! wink emoticon smile emoticon